இணைய பூக்களின் இடுகை யூடே
தமிழினி மெல்ல ஓகும்
என் பாரதிக்கு ..!
உதயவலம்..
மலர்காவில் வண்டமர்ந்ததும்
மயக்கத்தில் தேனேந்தும்.
முறுவலிலே தோய்ந்திடும்
முயக்கத்தில் மலரழகுறும்.
முக்குளித்த வெட்கத்தால்
முகில்கள் சிவந்து
முகவுரைக்க, கதிரவன்
முகம் பொன்னானது.
அள்ளிருள் மறைய
புள்ளினப் பூபாளம்.
உள்ளலுடன் கன்றினம்
துள்ளல் தாயிடம்.
மண்ணுய்யக் கஞ்சரன்
மண்டல யாத்திரையேகினான்.
வண்ண ஓவியத்தின்
கண்குளிர் வானம்.
கமலங்கள் முகம் மலர
கலகலத்தோடும் நீராட
காற்று தென்றலாய் தடவ
வேற்று நாளொன்று புலருது.
தடுக்கவியலா ஊர்வலம்.
எடுக்கவியலா ஒளிவலம்.
வடுக்களில்லாக் கொடைவலம்.
விபாகரன் உதயவலம்.
(அள்ளிருள் – கும்மிருட்டு. உள்ளல் – மகிழ்தல். விபாகரன், கஞ்சரன் -சூரியன்.)
No comments:
Post a Comment