வலைப்பூ கவிதை
தாய் தேசம் தாண்டி
தொலை தூரம் வந்து
அந்நிய தேசத்தில்
அந்நியப்பட்டு
ஆங்கில அனர்த்தங்களை
அருமையென ரசித்து
அந்திப் பொழுதுகளை
ஆழ்கனவில் தொலைத்து
தமிழுக்கு தவித்த
தன்னிச்சை தேடலில்
சட்டென்று மாட்டும்
யாரோ எப்போதோ பதித்த
வலைப்பூ கவிதை...!
- தாமரை யோகேஷ்
No comments:
Post a Comment