1. இயன்றவரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்
2. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரக் கன்று நடுவேன். நண்பர்களின் பிறந்தநாளுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுப்பேன்.
3. என் பெற்றோர் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறதா எனச் சோதிக்கச் சொல்வேன்.
4. என் வீடு, பள்ளி என அனைத்து இடங்களிலும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பேன்.
5. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
6. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வதைப் பழக்கமாகக்கொள்வேன்.
7. என் வீட்டில் குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எஃப்.எல். விளக்குகளைப் பொருத்தச் சொல்வேன்.
8. கண்ட இடங்களில் குப்பைக் கூளங்களைப் போடாமல் தடுப்பேன்.
9. சாலைகளில் எச்சில் துப்புவது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுப்பேன்.
10. புவி வெப்பம் அடைதல், காலநிலை மாற்றம் தொடர்பாகப் பேரணி, கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், வீதியோர நாடகங்கள் மூலம் விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொள்வேன்.
- Vikatan
- Vikatan
No comments:
Post a Comment