
கடிய வெய்யில் நாளொன்றில் சட்டென மேகம் இருண்டு
முகத்தில் சிலீரென பட்டுபோகும் மழைத்துளி
என்கைபட நட்டு நீரூட்டிய கொல்லைச்செடி
முதலில் கிளைத்து விடும் மலர்மொட்டு
நெடும் பயணத்திற்காய் பேருந்தில் ஏறி ஜன்னலோர
இடம் கிடைத்து அமர்ந்ததும் வரும் அமைதி
கொளுத்தும் வெயிலில் தார்வார்க்கும் தொழிலாளி இடையில்
நிறைவாய் தேனீர் பருகுவதை காணும் நெகிழ்ச்சி
இன்னும் பல குட்டித்தருணங்கள் தந்துபோகும்
மெலிதாய் என்னிதழோரம் ஓர் புன்னகைப்பூ
No comments:
Post a Comment